பிரபல கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த நடிகர் விஜய்சேதுபதி.! அந்த வீரரை இப்ப ஏன் சந்தித்தார் தெரியுமா.? வைரல் பதிவு இதோ.

vijaysethupathy

திரையுலகைப் பொறுத்தவரை எங்கேயே ஒரு ஓரத்தில் நடித்து இருப்பவர்கள் கூட திடீரென மிகப் பெரிய ஸ்டாராக முடியும் உதாரணமாக விஜய் சேதுபதியை கூட சொல்லிவிடலாம் ஏனென்றால் ஆரம்ப காலகட்டத்தில் ரவுடிகளுக்கு அடியாளாக ஒரு மூலையில் வந்து கொண்டிருந்த இவர் போகப்போக தனது திறமையின் மூலம் தென்பட ஆரம்பித்தார்.  குணச்சித்திர கதாபாத்திரம் அடுத்தது வில்லன், ஹீரோ படிப்படியாக முன்னேறிக் கொண்டே போனார்.

தற்போது சினிமா இவரை சுத்தி வருகிறது. காரணம் சினிமா என்றால் என்ன என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். இப்போது கதையின் முக்கியத்துவம் எங்கு இருந்தாலும் அது நம்மை வளர்த்து விடும் என்பதை உணர்ந்து தற்பொழுது ஹீரோ, வில்லன் என அனைத்திலும் வெற்றி கண்டு வருகிறார் அதன் விளைவாகவே தமிழில் தாண்டி தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஆனால் சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் தான் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியைப் பெறாமல் இருக்கிறது அதுவும் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் சுத்தமாக வசூலை கொடுக்காததால் தயாரிப்பாளர்கள் பலரும் தலையில் துண்டு போட்டுள்ளனர் என்று கூற வேண்டும்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான துக்ளக் தர்பார், லாபம் போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் அனபெல் சேதுபதி என்ற திரைப்படம் ஓரளவு மக்களை கவர்ந்துள்ளது.  அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் சிறப்பம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து மக்கள் நல்ல வரவேற்பைப் பெற்றால் மட்டுமே அவரது ரசிகர்கள் ஆசை படுகின்றனர்.

அவ்வாறு செய்தால் மட்டுமே நீண்ட தூரம் தமிழ் சினிமாவில் பயணிக்க முடியும் என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி பிரபல கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்தை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு சில நேரம் பேசினார்.

இவர்கள் இருவரும் சந்திக்க முக்கிய காரணம் இருவரும் ஒரு புதிய படத்தில் கமிட் ஆக உள்ளனராம் ஸ்ரீசாந்த் கிரிக்கெட்டை தொடர்ந்து அவர் நடிக்கவும் செய்துள்ளார் அந்த வகையில் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார் தற்போது இந்த படத்தின் மூலம் அவர் தமிழும் நடிக்க வந்தாலும் வரலாம் என கூறப்படுகிறது. இதோ அவர்கள் எடுத்த கியூட் புகைப்படம்.

vijaysethupathy and sree santh
vijaysethupathy and sree santh43