தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியான நிலையில் இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆனதற்கு பிறகு ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குனர் பல தகவல் வெளியானது. எனவே விக்னேஷ் சிவனும் அஜித்திற்கு ஏற்றார் போல் கதையை எழுதி வந்தார்.
இவ்வாறு அஜித்தை வைத்து படம் இயக்கப் போகிறோம் என்ற மிகப்பெரிய கனவுடன் இருந்து வந்த விக்னேஷ் சிவனுக்கு கடைசியில் மனவேதனை தான் கிடைத்தது. அதாவது விக்னேஷ் சிவன் கதையைக் கூற அது அஜித் மற்றும் லைகா நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் ஏகே 62விலிருந்து விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டனர்.
எனவே இதனை அடுத்து ‘ஏகே 62’ திரைப்படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் என உறுதியான தகவல் வெளியாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரையிலும் வெளிவரவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இதனை அடுத்து தன்னுடைய கணவருக்காக நயன்தாரா நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய உள்ளாராம்.
எனவே அஜித்துக்காக எழுதப்பட்ட கதையில் விஜய் சேதுபதி மட்டுமல்லாமல் இவருடன் இணைந்து பிரதீப் ரங்கநாதனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதனை அடுத்து விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பெரிய படங்களை தயாரித்தது வரும் கமல் விக்னேஷ் சிவன் இயக்கம் இருக்கும் இந்த படப்பினையும் கமல் தயாரிக்க முடிவு செய்துள்ளாராம்.
இவ்வாறு சமீபத்தில் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பல தத்துவங்களை பதிவிட்டு இருந்தார். எனவே அதேபோல் இவருக்கு ‘ஏகே 62’ படத்தின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்றாலும் தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கம் இருக்கும் இந்த படத்திற்கு நடிகை நயன்தாரா உதவியாக இருந்து வருகிறாராம். எனவே கமலிடம் இது குறித்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.