தமிழ் சினிமாவில் கமல் விக்ரம் இவர்களை தொடர்ந்து நடிப்பில் தன்னுடைய திறனை தனித்துவமாக காட்டி வருபவர் தான் நடிகர் விஜய்சேதுபதி இவர் தமிழ் சினிமாவில் மிக பிஸியான கதாநாயகனாக வலம் வருவது மட்டும் இல்லாமல் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பாரபட்சமின்றி தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என அனைத்து மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருவது மட்டுமில்லாமல் தன் கதாநாயகனாக தான் நடிப்பேன் என்ற கர்வம் இவருக்கு சுத்தமாகவே கிடையாது.
அந்த வகையில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அதற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பதில் வல்லவர். அந்த வகையில் சமீபத்தில் இவர் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்க அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து இருப்பார் இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
ஆனால் சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த ரூபாய், லாபம், அன்பெல் சேதுபதி ஆகிய இந்த திரைப் படங்களும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் இணைந்து விடுதலை என்ற படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பொதுவாக விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவது கிடையாது அந்த வகையில் திடீரென அவர் புது கார் வாங்கி உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.