சென்சார் தகவலை வெளியிட்ட காத்துவாக்குல 2 காதல் படக்குழுவினர்கள்.! யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியுமா.?

kaathuvaakula-rendu-kadhal
kaathuvaakula-rendu-kadhal

பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகர் அவருக்கு ஜோடியாக ஒரு நடிகை நடித்த வந்தாலே அந்த திரைப்படத்திற்காக எதிர்பார்த்து வருவது வழக்கம். இப்படிப்பட்ட நிலையில் இரண்டு முன்னணி நடிகைகள் மற்றும் ஒரு நடிகர் என காதல் கதையை மையமாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம்தான் காத்துவாக்குல 2 காதல்.

இத்திரைப்படத்தின் பாடல் மற்றும் ப்ரோமோ ஆகியவை சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. பிறகு ரசிகர்கள் நயன்தாரா இத்திரைப்படத்தில் மிகவும் ஹோம்லியாக நடித்திருப்பதாகவும் சமந்தா மட்டும் கவர்ச்சி நடிகையாக நடித்து இருப்பதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அதோடு நடிகை சமந்தா பேசும் டபுள் மீனிங் வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  எனவே இத்திரைப்படத்தினை பார்க்க வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் முன்பதிவு செய்து மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சற்று முன்பு வெளிவந்துள்ள தகவலின்படி இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்தப் படத்தின் சென்சார் தகவலை அறிவித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூஎ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.

அந்தவகையில் யூஎ என்பது 12 வயதுக்கும் குறைந்தவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வழிநடத்தலின் பேரில்தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.