மக்கள் செல்வனாக தனது நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து எப்பொழுதும் எளிமையாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவருடைய பேச்சி எளிமை போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது எனவே மக்கள் செல்வன் என அனைவராலும் போற்றப்படுகிறார்.
தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது தெலுங்கு என மற்ற மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக சமீபத்தில் காற்றுவாக்கில் இரண்டு காதல் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது.
முழுக்க முழுக்க இத்திரைப்படம் காமெடியை மையமாக வைத்து ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று நல்ல விமர்சனத்தை தந்து வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து இன்னும் ஏராளமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்றும் நாம் அனைவருக்கும் தெரியும்.
இப்படிப்பட்ட நிலையில் 41 வயதாகும் முன்னணி நடிகையுடன் விஜய் சேதுபதி மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஏராளமான நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த லைலா பல வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் விஜய்சதுபதியை சந்தித்த இவர் இருவரும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.