வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் தான் நடிகர் கார்த்திக். இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சரித்திரத்தை படித்தவர் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இவர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இவருடைய முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று தந்தது. இந்த படத்தில் முதலில் நடிகர் கார்த்திக் கதாபாத்திரத்தில் பிரபல டாப் நடிகர் ஒருவர்தான் நடிக்க இருந்ததாம் ஆனால் அந்த நடிகர் நடிக்க முடியாமல் போனதால் தான் நடிகர் கார்த்திக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆம், அது வேறு யாருமில்லை நடிகர் விஜய் தான். அதாவது இயக்குனர் அமீர் நடிகர் விஜயை இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து இருக்கிறார் ஆனால் திடீரென நடிகர் விஜயால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது எனவே வேறு வழியில்லாமல் நடிகர் கார்த்திக்கை இந்த படத்தில் நடிக்க வைத்தாராம்.
இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. நடிகர் கார்த்திக்கு இதுதான் அவருடைய முதல் திரைப்படமாக இருந்தாலும் கூட தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். மேலும் இந்த படம் சில விருதுகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்திலேயே கிராமத்து கதைய அம்சம் உள்ள திரைப்படத்தில் நடித்த கார்த்திக் தற்பொழுது வரையிலும் அடுத்தடுத்து கிராமத்து கதைய அம்சம் உள்ள பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த விருமன் படம் கூட கிராமத்து கதை அம்சம் முடியாததாக தான் அமைந்தது.