vijay property value : தளபதி விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்சினிமாவில் ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் நடிகர் என்றால் அதில் விஜய்யும் ஒருவர், விஜய் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர், தற்பொழுது விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஊரடங்கு கொரோனா முடிந்த பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் பற்றிய தகவல்கள் ரசிகர்களிடையே மிகவும் சுவாரசியமாக பார்க்கப்படுகிறது, அந்தவகையில் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வராத நிலையில், விஜய்யின் சொத்து மதிப்பு விவரங்களை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது அது சமூக வலைத்தளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.
அதில் விஜய் ஒரு திரைப்படத்திற்கு சம்பளமாக கிட்டத்தட்ட 80 கோடி வரை பெறுகிறார் எனவும், இவர் வைத்துள்ள கார்களின் மொத்த மதிப்பு 5 கோடி எனவும் திருமண மண்டபம் மற்றும் சில வேலைகள் மூலமாக வருடத்திற்கு 100 கோடி ரூபாய் வரை வருமானமாக பெறுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் விஜயின் வீட்டு மதிப்பு 40 கோடி வரை இருக்கும் என கூறுகிறார்கள், அந்த வகையில் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 400 கோடி வரை தாண்டும் என பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.