தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய் இவர் கடைசியாக நடித்த பீஸ்ட், வாரிசு போன்ற படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலை வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போகிறது.
இறுதிக்கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுப்பதால் அவருடைய சம்பளமும் நாளுக்கு நாள் உயர்கிறது தனது 68வது திரைப்படத்திற்காக விஜய் 200 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன சினிமாவில் நன்றாக சம்பாதிக்கும் விஜய் அதைத் தாண்டி பல தொழில்களிலும் காசு பார்த்து வருகிறார்.
விஜய் சிறுவயதில் இருக்கும் போதே அவரது தந்தை எஸ். ஏ.சி திருமண மண்டபம் ஒன்று கட்டி இருந்தார் அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட தளபதி விஜய் தற்பொழுது பல முக்கிய இடங்களில் ஆறு திருமண மண்டபங்களை விஜய் நடத்தி வருகிறார் விருகம்பாக்கத்தில் கூட முக்கிய வளாகம் கட்டி தியேட்டர் நடித்து வருகிறார்.
அது மட்டும் இன்றி தமிழ்நாடு முக்கிய திரையரங்குகள் திறக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறாராம் இது தவிர சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். அத்துடன் நின்றுவிடாமல் தமிழ்நாட்டையும் தாண்டி துபாயிலும் இதே தொழிலை செய்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் விஜய் தனது தங்கை நினைவாக ஓசூரில் நிர்வாகிகள் மூலமாக கல்விக்கூடங்களை நடத்தி வருகிறார்.
இதை அதிகரிக்கும் திட்டத்தில் தளபதி செயல்பட்டு வருகிறார். இவை அனைத்தும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தாமல் விஜய் இந்த தொழிலை செய்து வருகிறார். இதனால் விஜய்க்கு சினிமாவையும் தாண்டி பல வழிகளில் காசுகள் குவிகின்றன. இவை இப்பொழுது தெரியாமல் இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இவை அனைத்தும் வெட்ட வெளிச்சமாக தெரியும் என பலரும் கூறுகின்றனர்.