விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படம் வெளி வருவதற்கு தயார் நிலையில் இருக்கிறது. வரும் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மைக் மோகன், லைலா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
அது மட்டும் இன்றி வெங்கட் பிரபுவின் கூட்டாளிகளும் இதில் இணைந்திருக்கின்றனர். தற்போது அனைவரும் சோசியல் மீடியா சேனல்களில் வளைத்து வளைத்து பேட்டி கொடுத்து படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர்.
இதில் முக்கிய சஸ்பென்ஸ் கூட உடைந்துள்ளது. ஆனாலும் படத்தை முதல் காட்சியே பார்க்க வேண்டும் என ரசிகர்கள் துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் விஜயிடம் இருந்து அதிரடியான உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்திருக்கிறது.
தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தளபதி முக்கிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது கோட் படத்தை அரசியல் ஆக்கி விட வேண்டாம் தமிழக வெற்றி கழகத்தின் அடையாளம் எங்கும் இருக்கக்கூடாது.
பேனரில் கட்சி கொடியை பயன்படுத்த கூடாது என கூறியிருக்கிறார். மேலும் குடும்ப ஆடியன்ஸ் மற்றும் ரசிகர்கள் படத்தை என்ஜாய் செய்வதற்கு தொந்தரவாக யாரும் இருக்கக்கூடாது எனவும் கண்டிப்புடன் கூறிவிட்டாராம்.
முன்னதாக படத்தின் சிறப்பு காட்சிக்கான டிக்கெட் அதிக விலைக்கு விற்று வருவதாக ஒரு புகார் எழுந்தது. அதனால் பல தியேட்டர்கள் அந்த காட்சியை ரத்து செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் விஜயின் அதிரடி உத்தரவு கோட் திருவிழாவில் கலவரம் ஏற்படாமல் தடுக்கும் என தெரிகிறது.