அஜித் ரசிகர்களுக்கு கும்பிடு போட இருக்கும் விஜய் ரசிகர்கள்.! என்னா பேச்சி பேசினீங்க.. விஜய் கொடுத்த ஷாக்

ajith
ajith

Vijay; நடிகர் விஜய் தனது ரசிகர்களிடம் இதற்கு மேல் அஜித் ரசிகர்களிடம் அன்பாக பழகுங்கள் என கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தற்பொழுது தமிழ் சினிமாவில் இரு முக்கிய நட்சத்திரமாக இருந்து வருபவர்கள் தான் விஜய் மற்றும் அஜித் இவர்களுக்கென பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அப்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானது இரண்டுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் இருதரப்பு ரசிகர்களும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டார்கள். தற்பொழுது வரையிலும் சோசியல் போட்டி போட்டுக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் அரசியலில் களமிறங்க இருக்கும் நிலையில் அதற்கான வேலைகளில் மும்பரமாக ஈடுபட்டு வருகிறார். எனவே இதன் காரணமாக தொடர்ந்து தனது ரசிகர்களை வரவழைத்து பல அறிவுரைகளை கூறி வருகிறாராம் அப்படி அஜித் ரசிகர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதாவது, தொடர்ந்து விஜய் மாணவர்களுக்காக பல உதவிகளை செய்து வரும் நிலையில் இவர் வருகின்ற 2026ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் நிற்பருப்பதற்காக தான் இவ்வாறு செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இத்தனை வருடங்களாக தனது ரசிகர்களுக்கு இதுபோன்ற அறிவுரையை கூறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த மூன்று வருடத்திற்குள் தனது பெயரில் எந்த ஒரு சர்ச்சையும் வரக்கூடாது எனவும் எனவே இதன் காரணமாக அஜித் ரசிகர்களிடம் மிகவும் அன்பாக பழக வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறாராம்.

இவ்வாறு திடீரென்று விஜய் இப்படி கூறியிருப்பது கண்டிப்பாக அரசியலுக்காக தான் என சொல்லப்படுகிறது. தற்பொழுது விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தனது காட்சிக்கான படப்பிடிப்புகளை விஜய் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.