என்ன செய்தாலும் அந்தப் பிரபலத்தை கேட்டு முடிவெடுக்கும் நடிகர் விஜய்.. யார் தெரியுமா?

vijay

நடிகர் விஜய் சமீப காலங்களாக அரசியலில் ஈடுபட இருக்கிறார் என தொடர்ந்து ஏராளமான தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் ஏராளமான தொண்டுகளை செய்து வருகிறார்கள். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன் அடைந்து வரும் நிலையில் விஜய் விரைவில் அரசியலில் ஈடுபட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியான நிலையில் இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தின் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு இவர்களுடைய கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

எனவே லியோ படத்தின் ரிலீஸ்காக மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றார்கள். இப்படிப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜய் தனது 49வது பிறந்தநாள் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார் மேலும் இவருடைய பிறந்தநாள் ஸ்பெஷல்லாக லியோ பட குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விஜய் பாடிய முதல் பாடல் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இதனை அடுத்து விஜய் அண்மையில் நல்ல மதிப்பெண் வாங்கிய மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் எனவே விஜய் அரசியலில் ஈடுபட ஆர்வமாக இருப்பதினால் தான் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது. மேலும் லியோ தான் இவருடைய கடைசி படம் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இப்படிப்பட்ட நிலையில் விஜய் அரசியலில் களம் இறங்க இருக்கும் நிலையில் தான் என்ன செய்தாலும் பிரபல ஜோதிடர் கூறுவதைக் கேட்டு அதுபோலவே நடந்து வருவதாக பத்திரிக்கையாளர் சிலர் கூறி வருகின்றனர். இவ்வாறு விஜய் இதற்கு மேல் படங்களில் நடிக்கவில்லை என கூறப்பட்டாலும் விஜயின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.