விஜய் பிறந்த நாளுக்கு மாஸ் போஸ்டரை வெளியிட்ட மாஸ்டர் தயாரிப்பாளர்.!

vijay mastre
vijay mastre

உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய். இந்நிலையில் இவரின் பிறந்தநாளை வருடம் வருடம் ரசிகர்கள் மிகவும் பிரபலமாக கொண்டாடுவது வழக்கம் இந்த வகையில் வரும் 22ஆம் தேதி இவரின் பிறந்தநாளை ஒட்டி தற்போழுதே ரசிகர்கள் இணையதளத்தில் விஜய் பற்றிய பல தகவல்களை கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் விஜயை வைத்து காமன் டிபி-ஐ உருவாக்கி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர்.

இத்திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. விஜய் தொடர்ந்து இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் வில்லனாக அறிமுகமாகி பின்னி பெடல் எடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளரும்  செவன் ஸ்கிரீன்  ஸ்டுடியோ நிறுவனமான லலித் தனது சமூக வலைத்தளத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் tp ஒன்றை வெளியிட்டுள்ளார்.  விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டது போல் முழுவதும் விஜயின் திரைப்படத்தை வைத்து tp-யை உருவாக்கியுள்ளார்கள்.

thalapathi 3
thalapathi 3

இவர்களைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் பிறந்தநாளான ஜூலை 22-ஆம் தேதி தளபதி 65 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது எனவே தற்போது விஜய் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உற்சாகத்திலும் இருந்து வருகிறார்கள்.