அஜித்தை போல் விலை உயர்ந்த பைக்கில் வலம் வரும் தளபதி விஜய்.! வைரலாகும் புகைப்படம்

vijay
vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

கொரோனா காரணத்தினால் எந்த படமும் தியேட்டரில் ரிலீஸ்சாகாமல் OTT வழியாக வெளியானது எனவே பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் தான் சில மாதங்கள் கழித்து 50 சதவீத பார்வையாளர்களுடன் வெளியானது. எனவே ரசிகர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் மிகவும் ஆர்வமாக மாஸ்டர் திரைப்படத்தைப் பார்த்து வந்தார்கள்.

இந்நிலையில்  இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் மிகவும் ஸ்டைலாக எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இப்புகைப்படத்தை பார்த்த தளபதி விஜயின் ரசிகர்கள் கமெண்டுகளையும், லைக்குகளையும்  அள்ளி குவித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.