நடிகர் விஜய்க்கு ஆடர் போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்.! உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்.

vijay peast
vijay peast

பொதுவாக ஒரு முன்னணி நடிகர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் ஒவ்வொரு நாளும் அந்தத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து வருவது வழக்கம். அந்த வகையில் விஜய் என்றால் சொல்லவா வேண்டும் பொதுவாக விஜய் நடிப்பில் எந்த திரைப்படம் வந்தாலும் ரசிகர்கள் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் ரிலீஸ் ஆகும் நாள் வரை அதனை பற்றிய தகவலை சோசியல் மீடியாவில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து மிகவும் பிரமாண்டமாக நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் கூட்டணியில் அனைவரும் எதிர்பார்ப்புடன் இருந்த திரைப்படம் தான் பீஸ்ட்.

இவர்களின் கூட்டணி எதிர்பார்க்காத வகையில் அமைந்ததால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வந்தார்கள். அந்த வகையில் அனிருத் இசையமைத்த இந்த பாடல் ஒவ்வொன்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது. உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் டிரைலர் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்திரைப்படம் ஏப்ரல் 13 அன்று வெளியானது முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் கலவை விமர்சனத்தைப் பெற்றது ரசிகர்கள் ஏராளமானோர் நெல்சன் திலீப்குமாரின் மீது மிகவும் கோபமாக இருந்து வருகிறார்கள்.  திரைப்படத்தைப்   பார்த்துவிட்டு முதல் நாளே படம் நன்றாக இல்லை என விமர்சனங்களை கூறி வந்தார்கள்.

இவ்வாறு இந்த திரைப்படம் தான் தோல்வியடைந்தது மீண்டும் நஷ்டமடைந்ததை பெற வேண்டும் என்பதற்காக அடுத்த படத்திலும் விஜயுடன் இணையவுள்ளார். பிறகு இந்த திரைப்படத்தில் விஜயிடம் கொஞ்சம் சம்பளத்தை குறைத்துக் பெருமாறு கேட்டுள்ளார்.

இதற்கு முன்பு நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் தோல்வியடைந்ததால் சூப்பர் ஸ்டார்ரிடம் அடுத்த திரைப்படத்திற்கான கால்ஷீட் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சம்பளத்தையும் குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை எடுத்துள்ளாராம். தற்போது சூப்பர் ஸ்டார் நடித்து வரும் இந்த திரைப்படத்தினை நெல்சன் இயக்கி வருகிறார்.

எனவே இதே போல் தான் நடிகர் விஜயிடம் பேசியுள்ளார்கள் தளபதி 66வது படத்தில் நடித்து வருகிறார். பிறகு அடுத்தடுத்து தொடர்ந்து விஜய்க்கும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார் என பலரும் கூறி வருகிறார்கள்.