பீஸ்ட் திரைப்பட சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து லீக்கான புகைப்படம்.!! தளபதியோட லுக்கே வேற மாதிரி இருக்கு.. வைரலாகும் புகைப்படம்.

peast 2

டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஏராளமான வெற்றி படங்களை தந்து புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து விஜய் தனது 65வது திரைப்படமான பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது ஆனால் சர்க்கார் திரைப்படம் கலவை விமர்சனத்தைப் பெற்றதால் பீஸ்ட் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற வேண்டும் என்பதற்காக இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைக்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சில பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளது.

பொதுவாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்ற நடிகர்களை விடவும் நடிகர் விஜயின் திரைப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சிகளையும் பாத்து பாத்து இயக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

peast 1
peast 1

இவர்களைத் தொடர்ந்து இத்திரைப்படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு, டிக் டாக் பிரபலம் அம்பர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று ஜானி மாஸ்டருக்கு பிறந்தநாள் என்பதால் பீஸ்ட் படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவ்வப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது அதில் விஜய் இதுவரை நாம் பார்க்காத அளவிற்கு ஒருவிதமான புது ஸ்டைலில் உள்ளார்.