தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர் தளபதி விஜய் தளபதி திரைப்படத்திற்கு பிறகு வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 திரைப்படத்தில் வேலைகள் துவங்கப்பட்டு ஒரு மாதம் தான் ஆகி வருகிறது. அதனையடுத்து விஜய் அடுத்தடுத்து படங்களில் நடிக்கப் போகும் தகவல் வெளியாகி வருகிறது. தளபதி 67 திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து அது உண்மையான தகவல் தான் என்று விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது மற்றும் பல விருது விழாக்களில் இந்த தகவல் கன்ஃபார்ம் செய்துவிட்டார். லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்திற்காக துவங்கும் நாள் மாஸ்டர் திரைப்படத்திற்கு துவங்கப்பட்ட அதே அக்டோபர் 3 ஆம் தேதியன்று துவங்க பட உள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 67 திரைப்படத்தை பற்றி அப்டேட்கள் விரைவில் வரும் என லோகேஷ் கனகராஜ் கூறுகிறார்.
இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கப் போவதாக தகவல் நேற்று வெளியானது. இதனையடுத்து மாஸ்டர் திரைப் படத்திற்கு பிறகு விஜய் ,லோகேஷ் கனகராஜ் ,அனிருத் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளன. இதனால் பாடல்கள் படம் என அனைத்தும் வேற லெவலாக ஹிட்டாகும் என ரசிகர்கள் கூறி வருகிறன்றனர். தளபதி #thalapathy67 ஹேக்ஸ்டக்கை உருவாக்கி ரசிகர்கள் ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள்.
இது தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் அடுத்த அப்டேட் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போவது நடிகை சமந்தா என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தளபதி 67 திரைப்படத்திற்கு விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போகிறாராம். இவர் ஏற்கனவே விஜயுடன் கத்தி, மெர்சல், தெறி ஆகிய பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமும் வேற லெவல் ஆக ஹிட்டாகி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து விஜயுடன் நான்காவது முறையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தா தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சமீபத்தில்தான் ரிலீசாகி மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றது. தற்போது விஜய் தேவர்கொண்டா உடன் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமந்தா இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கு மொழிகளிலும் டிசம்பர் 23-ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளது இதனை அடுத்து சமந்தா தளபதி 67 திரைப்படத்திற்கு சமந்தா தயாராக உள்ளார்.