தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருவதால் இவர் நடிப்பில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக சரிவை கண்டாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த வருடம் இவர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு தியேட்டரில் மாஸ்டர் திரைப்படம் ரிலிஸ்சாந்து. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூல் ரீதியாக உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படிப்பட்ட நிலையில் பொதுவாக தமிழ் சினிமாவில் வருடத்திற்கு ஒரு வருடம் முழுவதும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அதே போல் இந்திய அளவிலும் தொடர்ந்து ஒரு வருடம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.
அந்தவகையில் முன்பெல்லாம் தியேட்டரில் தான் அனைத்து திரைப்படங்களும் ரிலீஸ்சாகும் ஆனால் இந்த நிலைமை மாறி தற்பொழுது கொரோனா பிரச்சினையினால் OTT வழியாக ரிலீஸாவது வழக்கமாக இருக்கிறது. இதன் காரணமாக தற்பொழுது 2021ஆம் ஆண்டு OTT வழியாக ரிலீசான திரைப்படங்கள், மற்றும் வெப் சீரியல்கள் ஆகியவற்றை வைத்து டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள விவரங்களை பற்றிய IMDP இணையதளத்தின் வழியாக வெளிவந்துள்ளது.
இந்த லிஸ்டில் மாஸ்டர் திரைப்படம் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது.எனவே விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த லிஸ்டை ட்ரெண்டிங்காக்கி வருகிறார்கள். இதோ அந்த லிஸ்ட்,
1.மாஸ்டர்
2. அஸ்பிரண்ட்ஸ்( வெப் சீரியல்)
3. தி வைட் டைகர்
4. த்ரிஷ்யம் 2
5. நவம்பர் ஸ்டோரி
6.கர்ணன்
7. வக்கீல் ஷாப்
8. மஹாராணி( வெப் சீரியல்)
9. கிராக்
10. பி கிரேட் இந்தியன் கிச்சன்