Leo movie ticket booking issue: லியோ படம் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டர், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ஏஜிஎஸ் சினிமாஸ் உள்ளிட்ட ஏராளமான திரையரங்குகளில் இதுவரையிலும் லியோ படத்திற்கான முதல் நாள் டிக்கெட் புக்கிங் தொடங்கவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பிவிஆர் – ஐநாக்ஸ் மல்டிபிளக்சிகளில் லியோ படத்திற்கான ஷேர் அக்ரீமெண்ட் உறுதி செய்யப்பட்டு டிக்கெட் புக்கிங் தொடங்கி ஹவுஸ் ஃபுல் ஆகி இருக்கிறது. ஆனால் இதுவரையிலும் ரோகிணி மற்றும் ஏஜிஎஸ் திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் தொடங்கவில்லை எனவே இதனால் ரசிகர்களுக்கு ரோகிணி தியேட்டர் உரிமையாளர் ரேவந்த் சரண் மற்றும் ஏஜிஎஸ் தியேட்டரின் உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் கொடுத்துள்ளனர்.
அதாவது சென்னையில் இதுவரையிலும் ஏராளமான முன்னணி தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் தொடரவில்லை எனவே இன்று மாலை 6 மணிக்கு மேல் தான் முடிவு செய்யப்பட்டு டிக்கெட் புக்கிங் தொடங்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மறுபுறம் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் ஒன்றான பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் டிக்கெட் புக்கிங் தொடங்கி சில மணி நேரங்களிலேயே ஹவுஸ் ஃபுல் ஆகி இருக்கிறது.
எனவே இந்த பிரச்சனை காரணமாக ஏவிஎஸ் சினிமாசை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் ஓனர்கள் இடையேயான ஒப்பந்தம் இன்னமும் கையெழுத்திடப்படாத நிலையில் தான் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை என்றும் இன்று மாலை 6 மணிக்கு அனைத்தும் சால்வாகி டிக்கெட் புக்கிங் தொடங்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.
இவரை அடுத்து ரோகிணி தியேட்டர் ஓனர் ரேவந்த் சரண் அவரும் இதே பதிலை கூறியிருக்கிறார் நாளை மறுநாள் லியோ படம் வெளியாக இருக்கும் நிலையில் இதுவரையிலும் டிக்கெட் புக்கிங் தொடராதது சரியில்லை என விஜய் ரசிகர்கள் கருத்து குறி வருகிறார்கள்.