Leo Success Meet: லியோ படத்தின் வெற்றிவிழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. எனவே இதில் சில கண்டிஷன்களும் போட்டிருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் இருந்து வருகின்றனர்.
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக திரையரங்களில் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
தற்போது வரையிலும் பத்து நாட்களை கடந்து இருக்கும் லியோ 500 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியான இப்படத்தினை பார்ப்பதற்காக விடுமுறை நாட்கள் என்பதால் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.
எனவே சில நாட்களாக வசூல் மந்தமாக இருந்து வந்த சூழலில் நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் மீண்டும் வசூல் கல்லா கட்டியது. லியோ படத்தில் முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் இல்லையென ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். எனவே இதற்கு லோகேஷ் கனகராஜ் இரண்டாவது பாதி சரியில்லாததற்கு தான்தான் காரணமென ஒப்புக்கொண்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனை அடுத்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் விஜய் குட்டி ஸ்டோரி சொல்வார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வந்தனர். ஆனால் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என படக் குழுவினர்கள் தெரிவித்ததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள்.
எனவே இதன் காரணமாக தற்பொழுது சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கு தமிழக காவல்துறையும் அனுமதி வழங்கியுள்ள நிலையில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெற்றிவிழா நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 6000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.