லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் தனது படப்பிடிப்பு முழுவதையும் நிறைவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில் போன்றவர்களை வைத்து விக்ரம் படத்தினை இயக்கியிருந்தார்.
இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்றது இதனை அடுத்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜயை வைத்து லியோ படத்தினை உருவாக்கி வருகிறார். இந்த படம் ப்ரீ பிஸ்னஸ்சில் மாஸ் காமித்து வருகிறது. தொடர்ந்து லியோ படத்தின் அப்டேட் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் லியோ படத்தில் ரிலீஸ்க்காக காத்து வருகின்றனர் இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் பெற்றது. இந்நிலையில் தற்பொழுது உருவாகி வரும் லியோவை தன்னுடைய பாணியில் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
அப்படி லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப்பட பிடிப்பு சென்னையில் துவங்கியது இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பை முழுவதையும் விஜய் முடித்துள்ளார் எனவே புகைப்படத்தினை லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில் “இரண்டாவது பயணத்தை சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி அண்ணா” என கூறியிருந்தார். தற்போது லியோ படத்தின் பிரீ பிசினஸ் நடைபெற்று வரும் நிலையில் இதற்கு முன்பு சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ மற்றும் திரையரங்க உரிமைகள் என அனைத்தும் சேர்ந்து ரூபாய் 400 கோடி பிசினஸ் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இதனை அடுத்து தெலுங்கு திரையரங்க உரிமை ரூபாய் 25 கோடி வரை விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் இடம் பெற்றிருந்த நான் ரெடி என்ற பாடல் வெளியான நிலையில் அனிருத் இசையமைக்க விஜய் பாடியிருந்தார். ஆனால் இந்த பாடலுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்ததோ அதேபோல் சர்ச்சையும் எழுந்தது அதில் விஜய் சிகரெட் பிடிப்பதை போல் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் பலரும் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர்.