லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை கண்டது.
இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில் போன்றவர்களை வைத்து விக்ரம் திரைப்படத்தினை வெளியிட்டார் இந்த படம் பிளாக் பாஸ்டர் ஹிட் பெற்ற நிலையில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்கள் இவருடைய படங்களில் நடிக்க விரும்பி வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ படத்தை உருவாக்கி வரும் நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது தற்பொழுது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் முடியயிருக்கிறது.
இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் பிரமோஷனில் படக் குழுவினர் ஈடுபட இருக்கிறார் மேலும் இந்த படம் வருகின்ற அக்டோபர் மாதம் சோலோவாக வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது வசூலுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் இந்நிலையில் இப்படம் குறித்து ஏராளமான தகவல்கள இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சமீபத்தில் லியோ படத்தில் விஜய் பாடியிருந்த நான் ரெடி பாடல் வெளியாகி யூடியூப்பில் சாதனை படைத்தது.
ஆனால் இதில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படம் இருந்தால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்பொழுது லியோ படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எப்படி விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா கடைசி ஐந்து நிமிடங்கள் நடித்தாரோ அதே போல் லியோ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்ற வருவதாம் எனவே விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மறுபுறம் கண்டிப்பாக தனுஷ் நடிக்க வாய்ப்பு எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.