விஜய்யின் லியோ படத்திற்கு டப் கொடுக்கும் ‘சூர்யா 42’ திரைப்படம்.! வெளியான விற்பனை நிலவரம்..

leo
leo

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது இவர் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அதேபோல் நடிகர் சூர்யாவும் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்திற்கு தற்காலிகமாக சூரியன் 42 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எனவே ரசிகர்கள் இந்த படங்களுக்காக மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தமிழகத்தில் அதிக விலைக்கு டிஜிட்டல் உரிமை விற்பனை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அதில் விஜய்யின் லியோ திரைப்படம் முதல் இடத்திலும் சூர்யாவின் சூர்யா 42 திரைப்படம் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீப காலங்களாக திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகிய எந்த அளவிற்கு ஆதரவு கிடைத்து வருகிறதோ அதேபோல் ஓடிடியிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ஓடிடி உரிமைகளும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகி வரும் நிலையில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தயாரிக்கும் பொழுது டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் பல கோடிகளுக்கு விற்பனையாகி விடுகின்றது.

அந்த வகையில் லியோ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் பொழுதே படத்தின் சாட்டிலைட் உரிமையை நேட்பிலிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் தற்பொழுது அதைப்போல சூர்யாவின் 42வது படத்தினை அமேசான் பிரைம் நிறுவனம் பல கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா 42 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பவானி நடித்து வரும் நிலையில் இவரை தொடர்ந்து யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படம் தமிழ் உள்ளிட்ட மொத்தம் 13 மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் சூர்யா இந்த படத்தில் 10 கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.