தளபதி விஜய வாரிசு படத்தை தொடர்ந்து “லியோ” படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. அடுத்ததாக தனது 68 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படம் தான் விஜய்க்கு கடைசி படம் என கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் அரசியலில் ஈடுபட போவதாக ஒரு தகவல் கசிந்து உள்ளது. இதனால் தமிழ் சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என செய்தியாளர்கள் திரைப்பட உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனிடம் கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்தது என்னவென்றால்..
தற்பொழுது மார்க்கெட்டில் பீக்கில் இருக்கும் விஜய் சினிமாவில் வீட்டு விலகுவதால் கோலிவுட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விஜய் அரசியலுக்கு சென்றால் அவருடைய படங்கள் வராது என்பதால் தமிழ் சினிமாவிற்கு எந்த இழப்பும் நேர்ந்திடாது அவர் இல்லை என்றால் வேறு நடிகர் உருவெடுப்பார்.
முன்பு தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா இருவரும் களத்தில் போட்டியிட்டனர். அவர்களுக்கு பின்னர் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் வெளியானது. பின்பு கமல், ரஜினி படங்கள் இருவரும் திரையில் மோதிக்கொண்டனர் இப்போ அஜித், விஜய் ஒவ்வொருவரும் காலத்திலும் புது புது நடிகர்கள் உருவாகத் தான் போகிறார்கள் ஆகையால் ஒருவர் சினிமாவை விட்டு போகப் போகிறார்.
என்றால் உடனே சினிமா அழிந்து போவதில்லை விஜய் அரசியலுக்கு செல்வதே தற்பொழுது யூகிக்கப்பட்ட விஷயம் ஒன்றுதானே தவிர அவர் அதை அதிகாரப்பூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அதை அவர் அறிவித்து அரசியலுக்கு சென்றாலும் இதில் யாரும் கருத்து சொல்ல முடியாது இது அவருடைய தனிப்பட்ட விஷயம் அவர் சினிமாவை விட்டு சென்றால் இன்னும் இளம் நடிகர்கள் வரத்தான் போகிறார்கள்.
சினிமாவிற்கு எந்த பங்கமும் ஏற்படாது ஆனால் பாக்ஸ் ஆபிஸில் தற்பொழுது உச்ச நாயகனாக இருக்கும் விஜயின் படங்கள் இனி திரையரங்குகளில் வராது என்றால் அது திரையரங்குகளுக்கு இழப்புதான் இருந்தாலும் அதை வேறு நடிகர்கள் படங்களை வைத்து சமாளித்து விடுவோம் என்று கூறி உள்ளார்.