வரி கட்டாத ஒரே காரணதால் தளபதி விஜயை வறுத்தெடுத்த நெட்டிசன்..! பக்கபலமாக பேசிய பிரபலம்..!

vijay
vijay

தமிழ் திரை உலகில் மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்திற்குமே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது வழக்கம் தான் அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை வசூல் சக்கரவர்த்தி எனவும் நம்பிக்கை நட்சத்திரம் எனவும் கூறுவார்கள்.

இதுவரை 64 திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய் எப்படியும் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருப்பார் அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் கூட பிகில் திரைப்படத்திற்கு 50 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளாராம்.  இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு 80 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார்.

இது போதாது என தற்போது நடிக்கவிருக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கு நடிகர் விஜய்க்கு சம்பளம் 100 கோடியாக இருக்கலாம் என அரசல்புரசலாக சமூகவலைத்தள பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. பொதுவாக பிரபலமாக இருக்கும்  பலரும் சொகுசு கார்களை பயன்படுத்துவது வழக்கம் தான்.

அந்த வகையில் ஆடி கார், பிஎம்டபிள்யூ கார் போன்றவற்றை விரும்பி பயன்படுத்துவார்கள். அந்த வகையில் ரோல்ஸ் ராய்ஸ் காரும் முன்னிலை வைக்கிறது இதை தமிழ்சினிமாவில் 22 நபர்கள் தான் உபயோகப்படுத்தி வருகிறார்கள் அதில் தளபதி விஜய்யும் ஒருவர்  இந்த கார் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

அந்த வகையில் இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாமல் இருப்பது மட்டுமல்லாமல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இந்த காரை பதிவு செய்யவில்லை இதனால் இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆனது மனு தாக்கல் செய்ததன் காரணமாக வழக்கு தொடர்ந்து வருகிறது.

vijay-3
vijay-3

நடிகர்கள் என்றால் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும் ரீல் ஹீரோவாக இருக்க கூடாது. அதுமட்டுமில்லாமல் வரி என்பது நன்கொடை அல்ல கட்டாய  பங்களிப்பு ஆகையால் அதனை கட்டாயம் கட்ட வேண்டும்  இவ்வாறு தவறியதன் காரணமாக விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அவருக்கு ஆதரவாக பாஜக கலை கலாச்சார பிரிவு தலைவியான காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.

அதாவது விஜய் நாடக ஹீரோ கிடையாது உண்மையான ஹீரோ தான் ஏனெனில் கொரோனா நிவாரண நிதி மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதி என பல்வேறு நிதிகளை கொடுத்து மட்டுமல்லமால் மாணவர்களை படிக்க வைக்கவும் உதவி செய்துள்ளார் அதே போல அவர்களுடைய ரசிகர்களின் குடும்பத்தை தனது குடும்பத்தை போல பார்த்து வரும் தளபதி விஜய்யை இந்த ஒரு விஷயத்திற்காக நம் தாழ்த்திப் பேசக் கூடாது என காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.

gayathri raguram
gayathri raguram