“பிதாமகன்” படப்பிடிப்பில் சூர்யா, விக்ரமுடன் இணைந்த நடிகர் விஜய் – யாரும் பார்த்திராத புகைப்படம்.

pithaamakan

சினிமா உலகில் ஒரு சிலர் மட்டுமே தன் படங்கள் மக்கள் மத்தியில் பேச வேண்டும் விருதுகளை அல்ல வேண்டும் என நினைத்து படத்தை பல வருடங்களாக எடுப்பது வழக்கம் அந்த வகையில் இயக்குனர் பாலா இதுவரை இயக்கிய படங்கள் அனைத்தும் பல்வேறு விருதுகளை தட்டிச் சென்றது.

அவரது படங்கள் எப்பொழுதும் மக்கள் மத்தியில் பேசும் படங்களாக இருந்து வந்துள்ளன. இதுவரையும் இயக்குனர் பாலா நந்தா, பிதாமகன், அவன் இவன், சேது,  நாச்சியார், பரதேசி இப்பொழுது சூர்யாவை வைத்து  ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக பிதாமகன் திரைப்படம் அப்போதைய காலகட்டத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. பிதாமகன் படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, மனோபாலா, என மிகப்பெரிய ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து அசத்தியது. இந்த படத்திற்கு இசை ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே அப்பொழுது வெற்றிப் பாடல்களாக அமைந்தன இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பிரபல நடிகரும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பாலா சூர்யா விக்ரம் லைலா ஆகியோருடன் தளபதி விஜய்யும் இணைந்து படப்பிடிப்பு தளத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ இதுவரை யாரும் பார்த்திராத அந்த அழகிய புகைப்படம்.

pithaamakan
pithaamakan