தனுஷின் கர்ணன் பட ரிலீஸுக்கு தளபதி விஜய் தான் காரணமாம்!! சிகரெட்டை உடைத்த தயாரிப்பாளர்.!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் பட்டாசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்து ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் ஜகமே தந்திரம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை நேரடியாக OTT வழியாக வெளியிட உள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குனர் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்தார்.

Rajisha Vijayan In Karnan Tamil Movie
Rajisha Vijayan In Karnan Tamil Movie

இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தின் ரிலீஸ்சிற்ருக்கு தளபதி விஜய் தான் காரணம் என்று கலைப்புலி தாணு கூறியுள்ளார்.கர்ணன் திரைப்படத்தை எப்பொழுது தியேட்டரில் அதிக மக்கள் அலை மோதுகிறார்களோ அப்போது தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று இருந்தேன்.

ஆனால்  விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அதனை நிறைவேற்றி விட்டது. மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல சாதனையை பெற்று உள்ளது.எனவே கர்ணன் திரைப்படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.