நடிகர் விஜய் தான் இந்தியாவில் மிகப்பெரிய டான்சர்.! அப்போ இவங்கெல்லாம் யாரு சீமான்.? பங்கமா கலாய்த்த ப்ளு சட்டை மாறன்…

blue-sattai-maran

சமீபத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் அவர்கள் நடிகர் விஜய் போன்று நடனமாட இந்தியாவிலேயே ஆள் இல்லை என்று கூறியது விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கலாம் மற்ற ரசிகர்களுக்கு இது ஒரு ட்ரோல் செய்யும் பொருளாக அமைந்தது. அந்த வகையில் இதை கேட்ட ப்ளூ சட்டை மாறன் அப்போ இவங்களெல்லாம் பார்த்தா உங்களுக்கு டான்சர் மாதிரி தெரியலையா சீமான் என்று பங்கமாக கலாய்த்து உள்ளார். இவருடைய இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தில் இருந்து அடுத்த அடுத்த அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர் வம்சி அவர்கள் வாரிசு படத்தில் நிறைய சஸ்பென்ஸ் இருப்பதாக கூறி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் வாரிசு படத்தில் இருந்து வெளியான டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அவர்களுக்கு இந்த ட்ரெய்லர் ட்ரோல் செய்யும் பொருளாக மாறியது மட்டுமல்லாமல் கடுமையாக விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். அந்த விமர்சனத்தை எல்லாம் தாண்டி தற்போது திரையரங்கில் வெளியாக காத்திருக்கிறது இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால் விஜய் ரசிகர்களும் கொஞ்சம் பதட்டமாகவே இருக்கிறார்கள்.

ஏனென்றால் விஜயின் போன படம் சரியாக ஓடவில்லை இந்த படமாவது சூப்பர்ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் வெளியே வந்த பிறகு தான் தெரியும் ஹிட் அடிக்குமா என்று. இந்த நிலையில் நடிகர் மற்றும் அரசியல்வாதி சீமான் அவர்கள் விஜய் போன்ற நடனமாட இந்தியாவிலேயே எந்த நடிகரும் கிடையாது என்று சீமான் அவர்கள் கூறியிருக்கிறார்.

சும்மாவே நடிகர்களை கண்டால் கடுப்பாகிவிடும் ப்ளூ சட்டை மாறன் இந்தப் பதிவை பார்த்தால் சும்மா விடுவாரா உடனே பிரபுதேவா, லாரன்ஸ், அல்லு அர்ஜுன், கிருத்திக் ரோஷன், இவர்களுடைய டான்ஸ் பார்க்கலையா சீமான் என்று அவருடைய பேச்சுக்கு எதிர் கமெண்ட் போட்டு ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

seeman
seeman
seeman