நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறு குழந்தை – இப்போ பிரபல சீரியல் நடிகை.! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போடும்..

vijay-
vijay-

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் இப்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்துள்ளார் படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து கோலாகலமாக ரிலீஸ் ஆகிறது வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் ஆக இருப்பதால்..

இந்த படம் ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் வெகுவாக கவர்ந்து எடுக்கும் என சொல்லப்படுகிறது. தளபதி விஜய் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார் அந்த படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க எடுக்க உள்ளார். தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறதாம்.

இந்த படத்தில் பிரித்திவிராஜ், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் விஷால் போன்ற நடிகர்கள் நடிப்பதாக சொல்லப்படுகிறது ஆனால் இது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜய் பற்றிய செய்திகள் வெளி வருவது வழக்கம் அந்த வகையில் தளபதி விஜய்.

சினிமா ஆரம்பத்தில் ஒரு குழந்தையை தூக்கி வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த குழந்தை தற்பொழுது மிகப்பெரிய ஒரு நட்சத்திரமாக வளர்ந்து தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை  இப்பொழுது வைத்திருக்கிறதாம் அந்த குழந்தை வேறு யாரும் அல்ல இப்பொழுது சன் டிவியில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகள் ஒருவரான ஹீமா பிந்து  தான்.

இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் நடித்து வருகிறார் இதற்கு முன்பாக இதயத்தை திருடாதே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இதோ நீங்களே பாருங்கள்  புகைப்படத்தை..