நடிகர் விஜய் ஒரு சந்தர்ப்பவாதி.! தளபதி ரசிகை ஓபன் டாக்..

vijay
vijay

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகராக இருக்கும் விஜய் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இது ஒரு செண்டிமெண்ட் ஆக்சன் படமாக உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவர காத்திருக்கிறது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் விஜய் தான் நம்பர் ஒன் அதனால் வாரிசு படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என ஒரு புது பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தார். அதற்கு ஏற்றார் போல உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாரிசு திரைப்படத்தை சில இடங்களில் வெளியிட வெளியிட்டு உரிமையை வாங்கி இருக்கிறார். இந்த வீடியோவை தற்போது படக்குழு இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள வாரிசு படத்திற்காக பிரமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. படக்குழு ஒரு பக்கம் புரமோஷன் செய்ய நடிகர் விஜய்யும் களத்தில் இறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் விஜயின் ரசிகையுமான ஒருவர் பத்திரிகையாளர்கள் பெட்டியில் விஜய் ஒரு சந்தர்ப்பவாதி மற்றும் தாழ்வு மனப்பான்மை குணம் கொண்டவர் என்று கூறியுள்ளார்.

அதாவது எப்போதுமே விஜய் அவர்கள் ஒரு புரளியை கிளப்பி விட்டு அப்படியே அமைதியாகி விடுவார் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த ஆறு மாத காலங்களாக  நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது அதாவது அவருடைய பெற்றோர்களை பார்த்துக் கொள்ளவில்லை என்று பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதும் அதிலிருந்து அவர் தப்பிப்பதற்க்கான  யுக்தியாகதான் இந்த வாரிசு பிரமோஷன் தற்போது போய்க் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அதே தினத்தில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகிறது இதற்காக துணிவு படக்குழு ஏதாவது ப்ரமோஷன் செய்கிறார்களா. அது மட்டுமல்லாமல் ஒரு நல்ல படமாக இருந்தால் அதுவே அனைத்து வேலைகளையும் செய்து விடும் எந்த ஒரு ப்ரமோஷனும் தேவையில்லை என்று கூறியுள்ளார்.