தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது மேலும் படத்தின் சண்டைக் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளதால் தற்போது வாரிசு படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஸ்மிகா நடித்த வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், சத்யராஜ், ஷாம், யோகி பாபு, குஷ்பூ, உள்ளிட்டா பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தில் தெறி விஜய்யை பார்க்கலாம் என்று பிரபல ஸ்டண்ட் இயக்குனர் திலீப் அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது தெறி படத்தில் விஜய் எவ்வளவு இளமையா இருக்கிறாரோ அதேபோல வாரிசு திரைப்படத்தில் இளமையாக இருக்கிறார். செண்டிமெண்ட் ஆக்சன் என உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் படபடப்பு முடிந்துவிட்டது மேலும் சண்டைக் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்.
மேலும் வாரிசு திரைப்படத்தில் மொத்தம் நாலு சண்டை காட்சிகள் அதில் மூன்று சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது இன்னும் ஒரே ஒரு சண்டை காட்சி மட்டும் தான் மீதம் உள்ளது என்று வாரிசு படத்தின் ஸ்டேன் இயக்குனர் கூறியுள்ளார். இந்த தகவல் வெளியான உடனே ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து வாரிசு பணத்தின் அப்டேட்டுகள் அடுத்த வாரம் வந்து கொண்டே இருக்கும் என ஒரு பக்கம் தகவல் வெளியாகியுள்ளது இதனால் ரசிகர்கள் தீபாவளி போல் கொண்டாடலாம் என காத்திருக்கிறார்கள்.
இந்த சமயத்தில் வாரிசு படத்தில் ஸ்டண்ட் இயக்குனர் கூறியது செம்ம வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் தெறி விஜய் பார்க்கலாம் என்று கூறியது தான் ரசிகர்களுக்கு மேலும் சந்தோசமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.