நடிகர் விஜய் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் மேலும் ஒரு படத்தில் நடிக்கும் போது அடுத்தடுத்த இயக்குனர்களிடம் கதை கேட்டு தனது அடுத்த பட இயக்குனர்களை செலக்ட் செய்வது இவரது வழக்கம் அதனால் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை அவரால் கொடுக்க முடிகிறது.
மேலும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் கூட சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர்கள் பலர் உடன் அடுத்தடுத்த படங்களில் இணைய உள்ளார்.
அந்த வகையில் முதலாவதாக தளபதி விஜய் பீஸ்ட் திரைப் படத்தில் நெல்சன் திலீப் குமாருடன் கைகோர்த்து பணியாற்றி உள்ளார். இந்தப் படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என கூறியுள்ளது இதனைத் தொடர்ந்து தெலுங்கு பக்கமும் அடி எடுத்து வைக்க உள்ளார்.
இப்படியே விஜய் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் விஜய் பற்றிய தகவல்கள் வெளிவருகின்றன அந்த வகையில் அண்மையில் தயாரிப்பாளர் கே ராஜன் பேட்டி ஒன்றில் தளபதி விஜய் ரஜினியை பின்னுக்கு தள்ளி விட்டார் என்பதே மறுக்க முடியாத உண்மை என்று தான் சொல்ல வேண்டும்.
என்றால் நடிகர் சிவாஜி படங்கள் பெரிய அளவில் வசூல் படைக்கும் அதன் பின்னர் ரஜினி அந்த இடத்தை பிடித்தார். அதேபோல் தான் இப்போதும் நடக்கிறது நடிகர் விஜய் ரஜினியின் இடத்தை பிடித்து விட்டார் இதுதான் உண்மையும் கூட இதை யாராலும் மறுக்க முடியாது என பேசியுள்ளார் ராஜன்.