தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நெல்சன் உடன் முதல்முறையாக கைகோர்த்து நடித்துள்ள திரைப்படம் தான் பீஸ்ட். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த இருக்கும் என கூறப்படுகிறது.
அதனால் நிச்சயம் ரசிகர்களுக்கு இந்த படம் செம்ம ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படம் ஏப்ரல் 14ம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியாகும் என கூறப்படுகிறது அதற்கு முன்பாக பல்வேறு அப்டேட்களை கொடுத்து உள்ளது. இதுவரையிலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அரபி குத்து பாடல் ஆகியவை வெளிவந்த நிலையில் அடுத்ததாக..
ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது இசை வெளியீட்டு விழா மற்றும் படத்தின் டிரைலர் தான்.இசை வெளியீட்டு விழா வெகு விரைவிலேயே தொடங்கியிருந்தது அதற்கான டிக்கெட்டுகளை கூட ரசிகர்கள் கைப்பற்றியிருந்தனர். இந்த சூழலில் விஜய் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார் அதில் அவர் சொல்ல வருவது தற்பொழுது மூன்றாவது கொரோனா அலை சற்று குறைந்துள்ளது.
இப்பொழுது ரசிகர்கள் கூட்டம் கூடினால் ஏதாவது ஒரு விதத்தில் பிரச்சனையில் முடியலாம் அல்லது பாதிப்புக்கு உள்ளாகலாம் அந்த காரணத்தினால் தளபதி விஜய் இசை வெளியீட்டு விழா வேண்டாம் என கூறியுள்ளார் போன தடவையை ரசிகர்கள் டிக்கெட் இல்லாமல் இசை வெளியீட்டு ரொம்ப கஷ்டப் பட்டது.
போல ஆகிவிடுமோ அல்லது ரசிகர்கள் இதனால் ஏதேனும் விபத்துக்கள் ஆனாலும் அது தர்மசங்கடமாக அமைந்து விடும் என்ற காரணத்தினால் இசை வெளியீட்டு விழா வேண்டாம் என கனத்த இதயத்துடன் கூறியுள்ளார்.