தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் கோடிக்கணக்கில் வசூல் வேட்டையை நடத்திவரும் நிலையில் தற்பொழுது விஜய் குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது 90 காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகர் தான் அப்பாஸ் சாக்லேட் பாயாக பெண்கள் மத்தியில் இடம் பிடித்த அப்பாஸ் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் சூப்பர் ஹிட் பட வாய்ப்பு அப்பாஸ் மிஸ் செய்த நிலையில் பிறகு விஜய் அந்த படத்தில் நடித்து சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
அதாவது நடிகர் விஜய் நடிப்பில் பாஸில் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருந்த நிலையில் இதுவரை தொடர்ந்து ராதாரவி, சிவகுமார், ராதிகா, சார்லி போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நடிகர் விஜயின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் காதலுக்கு மரியாதை என்று கூறலாம் முழுக்க முழுக்க காதல் கதையினை மையமாக வைத்து உருவாகிறது இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இவ்வாறு இந்த படத்தின் வாய்ப்பு முதலில் அப்பாஸ்க்கு கிடைத்த நிலையில் அதனை தெரியாத தனமாக தவற விட்டதாக சமீப பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது காதலுக்கு மரியாதை படம் வெளியான காலகட்டத்தில் தான் அப்பாஸ் சினிமாவில் ஓரளவிற்கு பிரபலமடைய தொடங்கினார். இந்த நேரத்தில் காதலுக்கு மரியாதை படத்தின் வாய்ப்பை பற்றி இவருடைய மேனேஜரிடம் கூற ஆனால் அந்த மேனேஜர் அப்பாஸிடம் சொல்லாமல் வேறு ஒரு படத்தில் கமிட் பண்ணி விட்டதாகவும் இதனால் தான் அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாக அப்பாஸ் கூறியுள்ளார்.