தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சியுடன் கைகோர்த்து வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 61வது திரைப்படமாகும் இந்த படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப கதையில் விஜய் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜூ தயாரித்து வருகிறார்.
படத்தில் விஜயுடன் இணைந்து பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் வாரிசு படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் பலரும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக விஜய் கைகோர்த்து தனது 67வது திரைப்படத்தில் நடிப்பார் என தெரிய வருகிறது. இந்த நிலையில் 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான பூவே உனக்காக திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து ரசிகர்கள் மத்தியில் பேவரட் படமாக அமைந்தது.
இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ஹீரோயினாக நடிகை சங்கீதா நடித்திருந்தார் இந்த படம் விஜய் கெரியரில் ஒரு முக்கிய திருப்புமுனை படமாக அமைந்தது. மேலும் பூவே உனக்காக படம் தமிழில் வெளியாகி பல மொழிகளில் டப் செய்யப்பட்டது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்ததற்காக விஜய் 25 ஆண்டுகளுக்கு முன் 5 லட்சம் சம்பளம் வாங்கினார் என தகவல் வெளிவந்துள்ளது.
தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்திற்காக 108 கோடி சம்பளம் வாங்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இந்த 25 ஆண்டுக்குள் விஜயின் வளர்ச்சியை பார்த்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.