Vijay : தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக வருபவர் தளபதி விஜய். இவர் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்து உள்ளார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடித்து போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்க மறுப்பக்கம் லியோ படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகளும் வெளிவர உள்ளன.
இந்த நிலையில் விஜய் வைத்து வெற்றி கண்ட இயக்குனர் ரமணா பேட்டி ஒன்றில் விஜயை பற்றி பெருமையாக பேசயுள்ளார். அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. முதலில் ஒரு ஸ்ப்ளெண்டர் பைக் வைத்திருந்தேன். அந்த பைக்கில் தான் நடிகர் விஜயின் வீட்டிற்கு சென்று திருமலை படத்தின் கதையை கூறினேன் பிறகு கதை பிடித்துபோக அவர் ஓகே சொல்லி படம் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது.
அதன் பிறகு ஒரு நாள் இயக்குனர் ரமணாவை விஜய் வீட்டுக்கு அழைத்து பணம் கொடுத்தாராம் எனக்கு சம்பளம் வந்துவிட்டது. இது எல்லாம் வேணாம் என இயக்குனர் ரமணா கூற விஜய் கட்டாயப்படுத்தி அந்த பணத்தை கொடுத்தாராம் அந்த பணத்தில் கார் வாங்கிக் கொண்ட நேராக நடிகர் விஜய்யின் வீட்டிற்கு சென்று காட்டி உள்ளார் இயக்குனர் ரமணா.
அப்பொழுது அவரின் காரில் ஒரு ரவுண்டு போகலாமா என்று கேட்டு இருவரும் சென்று உள்ளனர் பிறகு சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து இயக்குனர் ரமணா வீட்டிற்கு புறப்பட்ட போது அருகில் இருந்த ரமணாவின் மேனேஜரிடம் முதன் முதலில் வீட்டிற்கு பைக்கில் தான் வந்து என்னிடம் கதை சொன்னார் இப்பொழுது காரில் செல்கிறார் என் வீட்டிற்கு பைக்கில் வருபவர்கள் காரில் செல்ல வேண்டும்..
அதை நான் பார்த்து ரசிக்க வேண்டும் என கூறியுள்ளார் என் வாழ்க்கையில் நான் வாங்கிய முதல் கார் அதுதான் என் வாழ்க்கையில் திருமலைக்கு முன் பின் எல்லாம் கிடையாது எல்லாமே திருமலைக்கு பின் தான். விஜய் அந்த கதைக்கு ஓகே சொல்லாமல் இருந்திருந்தால் இன்று வரை நான் எங்கேயாவது கதை எழுதிக் கொண்டு இருந்திருப்பேன் என்று இயக்குனர் ரமணா கூறி உள்ளார்.