சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருவதால் ரஜினிக்கு அடுத்த இடத்தை தற்போது நிரந்தரமாக விஜய் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் அடுத்த படத்தை இது போன்ற ஒரு சூப்பர் ஹிட் படமாக கொடுக்க டாப் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வைத்துள்ளதால் படத்தின் எச்டி தரத்திலும் வேற லுக்கிளும் எடுக்க படக்குழு முனைப்பு காட்டி வருகிறது.
படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்ததைதவிர, படக்குழு அடுத்த கட்ட ஷூட்டிங் எடுக்க முடியாத சூழலில் இருந்து வந்தாலும் இந்த படத்தில் இருந்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டேவை தொடர்ந்து யோகி பாபு மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சின்னத்திரை வெள்ளித்திரையில் பணியாற்றிய நடிகர் சஞ்சீவ் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் சமீபத்தில் விஜய் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளர்.
அவர் கூறியது விஜய் மிகவும் அமைதியானவர் ஆனால் அவருக்கு ஒரு சில செயல்கள் செய்தால் கோபப்படுவார் என கூறினார். அதாவது யாராவது அவர் தலையில் கை வைத்தால் சுத்தமாக பிடிக்காது ரொம்ப கடுப்பாவார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார்.