மிகவும் எளிமையாக சைக்கிளில் சென்று வாக்களித்த விஜய்.!! ரசிகர்கள் மகிழ்ச்சி.வைரலாகும் வீடியோ.

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் தொடங்கியதை முன்னிட்டு காலை 6 மணியிலிருந்து பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேர்தல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது..

கோடை வெயிலின் காரணமாக திரைப்பிரபலங்கள் காலையிலேயே கூட்டம் கூடுவதற்கு முன்பே தங்களது வாக்கினை செலுத்தி விடலாம் என அவர்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு சென்றுள்ளனர்.

அந்த வகையில் தல அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து லைனில் நின்று தனது ஓட்டினை செலுத்தி விட்டு சென்றுள்ளார். மேலும் அவர் மட்டுமல்லாமல் நடிகர் கார்த்தி சூர்யா, சிவகுமார் உதயநிதி ஸ்டாலின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற பல பிரபலங்களும் காலையிலேயே தங்களது ஓட்டினை செலுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் தளபதி விஜய் தனது ஓட்டினை செலுத்துவதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து முக கவசம் அணிந்த படி சைக்கிளிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று உள்ளார்.

இவரைப் பார்த்த பல ரசிகர்கள் இவரின் சைக்கிள் பின்பே வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தபடியே தொடர்ந்து சென்றுள்ளனர். ஜனநாயக கடமையை செலுத்துவதற்காக சைக்கிளிலேயே விஜய் சென்றதைப் பார்த்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இவர் வாக்களிக்க சைக்கிளில் சென்ற வீடியோ இணையதளத்தில் கசிந்தது வைரலாகி வருகிறது. இது வந்து வீடியோ.