காமெடி நடிகர் சதீஷ் விஜய் குறித்து பேசி இருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடித்தவரும் விஜய் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார். அப்படி இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக சூப்பர் ஹிட் வெற்றியை பெற்று வருகிறது.
அப்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவருடைய நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியான நிலையில் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது இதனை தொடர்ந்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியை இருப்பதாகவும் ப்ரோமோஷன் பணிகளில் படைக்குழு ஈடுபட இருக்கிறார்கள். லியோ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் விஜய் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கும் நிலையில் இவரை தொடர்ந்து மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான் பைரவா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் காமெடி நடிகராக சதீஷ் நடித்திருந்தார். அந்த வகையில் நடிகர் சதீஷின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் தன்னுடைய வீட்டிற்கு அழைத்திருந்தாராம்.
அப்பொழுது விஜய் சதீஷ்க்காக கேக் தயார் செய்து வைத்திருந்தாராம் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது வேலை செய்பவர்களை அழைத்து கேக்கை எடுத்து வருமாறு கூறியுள்ளார். அந்த வேலைக்கார பெண் கேக்கை வெட்டி எடுத்துட்டு வந்தாராம் விஜய் இவ்வாறு இவர் செய்வார் என எதிர்பார்க்காமல் என்ன இது என ஷாக் ஆனாராம். அதன் பிறகு சதீஷுக்கு வந்த கேக் பீசில் எஸ், ஏ, டி லெட்டர் இருந்ததாம் இவ்வாறு இதனைப் பார்த்துவிட்டு சதீஷ் சிரித்தாராம் இவ்வாறு இந்த தகவலை சதீஷ் சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.