Rajinikanth: படிக்காதவன் படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்திருந்த நடிகர் விஜய் பாபு தனது 72 வயதிலும் அதே எனர்ஜி உடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது பீச் ஹவுஸை சுற்றி இருக்கும் இடங்கள் குறித்து சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியின் நடைபெற்ற படம் தான் படிக்காதவன் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
பொதுவாக சினிமா பிரபலங்கள் விலை உயர்ந்த வீடுகளில் வசித்து வருவது வழக்கம். மேலும் முக்கியமாக பீச் ஹவுஸ் வாங்குவதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இது குறித்த வீடியோக்களையும் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்கள். அப்படி தற்பொழுது விஜய் பாபுவின் பீச் ஹவுஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
விஜய் பாபு ஒரு வீடு ஒரு உலகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, குமரிப் பெண்ணின் உள்ளத்தில், ருசி கண்ட பூனை, எங்கம்மா மகாராணி, கசப்பும் இனிப்பும், படிக்காதவன், தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் என பல திரைப்படங்களில் நடித்து வந்த விஜய் பாபு கடைசியாக விஷால் நடித்த சக்ரா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
சினிமாவை தாண்டி தொழிலிலும் அதிக ஆர்வமுடைய இவர் தனது மகனையும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதன்படி கைதி, லத்தி மற்றும் சலாம் உள்ளிட்ட பல படங்களில் இவருடைய மகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படிக்காதவன் படத்தில் சிவாஜி மற்றும் ரஜினி உடன் நடித்த விஜய் பாபுக்கு தற்பொழுது 72 வயதாகும் நிலையில் அதே எனர்ஜுடன் இருந்து வருகிறார்.
தன்னுடைய பீச் ஹவுஸை சுற்றி காண்பித்த இவர் அப்பொழுது இந்த உலகத்திலேயே இரண்டு விஷயங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அதில் கடல் அலைகளையும் யானையின் அசைவையும் எப்பொழுதும் கண்டு ரசிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் 10 கார் வைத்திருந்தாலும் ஒரு காரில் தான் போகும் 10 வீடு வைத்திருந்தாலும் ஒரு வீட்டில் தான் இருக்கப் போகிறோம் என இந்த வீடு கிடைத்ததும் அதற்கு மேல் வேறு எதுவும் வேண்டாம் என நினைத்து சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டேன் என தெரிவித்துள்ளார்.