பொதுவாக ஒரு திரைப்படம் வெளி வந்தால் அந்த திரைப்படத்தை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுவது வழக்கம் தான் அந்த வகையில் ஒரு திரைப்படத்தை எவ்வாறு விமர்சனம் செய்யலாம் எப்படி செய்யக்கூடாது என்பது குறித்து விஜய் ஆண்டனி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்தவகையில் யூடியூப் சேனல் ஒன்றில் விஜய் ஆண்டனி கூறியது என்னவென்றால் படங்களை விமர்சனம் செய்யலாம் அதற்காக கொஞ்சம் மனிதாபத்தோடு செயல்பட்டால் நல்லது ஏனெனில் ஒரு மாணவன் பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டால் அதனை ஊரைக் கூட்டி சொல்வது கிடையாது.
பொதுவாக அவரவர் அறிவுக்கு ஏற்றார்போல் அவரவர்கள் நடந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் புத்திசாலியாகவும் அதிபத்திசாலியாகவோ சிலர் இருக்கலாம். அதற்காக உங்களை போலவே அனைவரும் இருக்க வேண்டும் என்பது மிகவும் தவறான விஷயம் ஏனெனில் அவரவருக்கு என்ன வருமோ அதுதான் வரும் அதைதான் செய்வார்கள்.
அந்த வகையில் ஒரு நடிகர் சமூகத்திற்கு எதிராக ஒரு திரைப்படம் நடித்து இருந்தால் அதனைப் பற்றி நீங்கள் விமர்சிக்கலாம் காசு வாங்கினா எப்படி வேண்டுமானாலும் நடிப்பியா என கேள்வி எழுப்பலாம் அது தவறில்லை ஆனால் மனிதாபத்துடன் நடந்துகொள்வது மிகவும் நன்று.
சமீபத்தில் இந்த வீடியோவை பார்த்து சேரன் அவர்கள் பாராட்டியது மட்டுமின்றி சாந்தனு பாக்யராஜ் அவர்களும் விஜய் ஆண்டனியை பாராட்டியுள்ளார்கள். மேலும் இந்த வீடியோ வைரலாக பரவுவது மட்டும் இல்லாமல் பல்வேறு பிரபலங்களும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.