வடக்கன்ஸ் கூட இப்படிப்பட்ட நிலைமையில் தான் இருக்கிறார்கள்.. நடிகர் விஜய் ஆண்டனியின் ட்விட்

vijay antony
vijay antony

தமிழ்நாட்டில் தற்பொழுது மிகவும் பதட்டத்திற்குரிய நிலைமையாக வடகன்ஸ் அதிகமாக வருகை தந்து வருவது இருந்து வருகிறது. மேலும் இது குறித்து ஏராளமான அரசியல் வாதிகள் பேசி வரும் நிலையில் ஒரு சில இடங்களில் வடகன்ஸ் மற்றும் இந்தியர்களுக்கு இடையே கடும் சண்டைகளும் நிலவி வருகிறது எனவே வடகன்ஸ்சை அவர்களுடைய நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என சிலர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறு வடகென்ஸ் இந்தியாவிற்கு வருவதால் தமிழர்களுக்கு வேலை கிடைக்கவில்லை மேலும் வடகன்ஸ் குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் வேலை செய்து வருகின்றனர். எனவே தமிழக தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது முக்கியமாக ஹோட்டல், கட்டிட வேலைகள் மற்றும் விவசாய வேலை என அனைத்திலும் வடகென்ஸ் பணியாற்றி வருகின்றனர்.

எனவே வரும் காலத்தில் வடகன்ஸின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகம் இருக்கும் எனவும் இவர்கள் தான் தமிழ் மக்களை ஆளப்போகிறார்கள் எனவும் கூறப்பட்டு வருகிறது. எனவே இவர்களை தற்பொழுது இங்கிருந்து அகற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர் மேலும் இது குறித்த ஏராளமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனவே வடகன்ஸ்சை வைத்து பலரும் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் முக்கியமாக கோபி சுதாகர் ட்ரோல் செய்தது மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இவர்களுடைய வீடியோவை பற்றி அரசியல்வாதிகள் கூட பேசினார்கள். இவ்வாறு இந்த பிரச்சனைக்கு பிரபல நடிகர் விஜய் ஆண்டனி டுவிட் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “வடக்கனும் கிழக்கனும் தெற்கணும் மேற்கணும்… நம்மளை போல் தன் குடும்பத்தினர்களை காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதர்கள் தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்” என டுவிட் செய்துள்ளார். எனவே இந்த டுவிட் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இவருக்கு பல ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.