விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி ஹீரோ அவதாரம் எடுத்த பிறகு சூப்பரான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் நான், பிச்சைக்காரன், சலீம், போன்ற படங்கள் அடுத்தடுத்த வெற்றி பெற்றன.
இருப்பினும் அண்மைக்காலமாக இவர் நடிக்கும் படங்களில் விஜய் ஆண்டனி நடிப்பு சிறப்பாக இருந்தாலும், தோல்வியை தழுவின அந்த வகையில் அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன், போன்ற படங்கள் இவருக்கு தோல்வி படங்களாக அமைந்தன.
இதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது சிறந்த இயக்குனர்களிடம் சிறந்த கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனி கையில் தற்பொழுது காக்கி, பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன. இந்த திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக கொலை படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் ஆண்டனி பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. விஜய் ஆண்டனி என்றால் அமைதியானவர் நல்லவராக தான் நமக்குத் தெரியும் ஆனால் அவரது நண்பர்களுடன் எப்பொழுதுமே செம ஜாலியாக இருப்பார்.
அப்படி தனது நண்பர்களுடன் ஜாலியாக பீர் அடிக்கும் வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதை ஒரு தடவை யூடியூப் சேனல் ஒன்றில் அவரே வெளிப்படையாக நான் சரக்கடிப்பேன் என மிகவும் ஓப்பனாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.