குழந்தைகளுடன் தனது ஹிட் பாடலுக்கு நடனமாடிய நடிகர் விஜய்.! வீடியோ இதோ.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரமாக மட்டுமல்லாமல் உலகில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனக்கென வளைத்து போட்டு உள்ளார் தான் நடிகர் விஜய். தற்பொழுது உள்ள அனைத்து ரசிகர்களும் விஜய்யை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

சொல்லப்போனால் நடிகர் ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபீஷில் மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதனை படைத்து வரும் படங்கள் விஜய் இதுதான். அதாவது தற்போதெல்லாம் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மிகவும் மாசாக இருந்து வருகிறார். ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வந்த நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அந்தவகையில் இத்திரைப்படம் 2-வது நாள் முடிவில் ரூபாய் 3.50 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் உலகமெங்கும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. தொடர்ந்த அடுத்த அடுத்த நாள் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது என்ற தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் பொதுவாக நடிகர் விஜயின் திரைப்படம் என்றால் அதில் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது வழக்கமாக இருந்து வருகிறது.  அந்த வகையில் தற்போது ட்விட்டரில் தளபதியின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் நடிகரும்,நடன கலைஞருமான சதீஷ் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய்யும் சேர்ந்து  ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.