நண்பன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணையாமல் போன சங்கர் மற்றும் விஜய்.!என்ன காரணம் தெரியுமா.?

sangar and vijay
sangar and vijay

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டு இருப்பவர் இயக்கினர் சங்கர்.சங்கர் சமீபத்தில் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கலாம் என்ற முடிவு செய்துள்ளார் ஆனால் அது தற்போது அது நடக்காமல் போய்விட்டது.

ஷங்கர் மற்றும் விஜய் கூட்டணியில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் நண்பன். இத்திரைப்படத்தினை தொடர்ந்து ரசிகர்களும் ஆவலாக இவர்கள் கூட்டணி மீண்டும் திரைப்படம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து வந்தார்கள்.  எனவே முதல்வன் படத்திலேயே விஜய்யை வைத்து இயக்கலாம் என சில வேலைகளை ஆரம்பித்தாராம் சங்கர்.

ஆனால் சில பிரச்சனைகளால் அத்திரைப்படத்தை இயக்க முடியாமல் போனதாம். இந்நிலையில் தற்பொழுது  கொரோனா நேரத்தில் சங்கர் விஜயிடம் ஒரு கதையை கூற விஜய்க்கும் அந்த கதை பிடித்துப் போக ஓகே சொல்லி உள்ளார்.  எனவே இயக்குனர் தயாரிப்பாளர்கள் சிலரை அணுகி உள்ளார்.

ஆனால் எந்த தயாரிப்பாளர்களும் இவர்களின் கூட்டணியில் திரைப்படத்தினை உருவாக்குவதை ஏற்றுக் கொள்ளவில்லையாம்.ஏனென்றால் ஷங்கர் மற்றும் விஜய் இருவரின் சம்பளம் ரூபாய்  150 கோடி மேல் இருக்கிறது இப்படிப்பட்ட நேரத்தில் அவ்வளவு பணம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

அதோடு சம்பளத்தையும் தாண்டி படப்பிடிப்பிற்கான தேவையான பணமும் தேவை எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படத்தை உருவாக்குவதற்கு தயாரிப்பாளர்கள் கொஞ்சம் தயங்கி வருகிறார்கள். எனவே இப்பொழுது இவர்களின் கூட்டணியில் எந்த திரைப்படமும் வெளிவர வாய்ப்பு இல்லை வருங்காலத்தில் பார்க்கலாம்.

இந்நிலையில் தற்போதைய ஷங்கர் தெலுங்கில் ராம்சரனுடன் ஒரு திரைப்படமும், ஹிந்தியில் ரன்வீர் சிங்குடன் ஒரு திரைப்படாத்திலும் கமிட்டாகியுள்ளார். விஜய் தற்போது தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்து. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்தலாம் என்று ஏற்பாடுகள் செய்து வந்தார்கள் ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.