வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் தனது விடா முயற்சியினாலும்,கடின உழைப்பினாலும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் தளபதி விஜய். பல சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு பிறகு தற்போது தான் முன்னணி நடிகராக நடித்து கலக்கி வருகிறார். அதோடு தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற மாநிலங்களிலும் விஜயின் படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாறு உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக அமோக வெற்றியை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது விஜய் பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் விஜய் பற்றிய தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பிரபல மூத்த நடிகரான ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் இந்த தகவலை விஜய் பல மேடைகளில் கூறி இருந்தார்.
இதன் காரணமாக விஜய் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எப்படியாவது ரஜினியுடன் இணைந்து ஒரு திரைப்படத்திலாவுது நடித்து விட வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தார் ஆனால் விஜய் ஆசைப்பட்ட இந்த ஒன்று நடக்கவில்லை என்பதால் அனைவருக்கும் வருத்தமான ஒன்றாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் அமோக வெற்றியை பெற்று இருந்தாலும் தற்போது வரையிலும் மறக்க முடியாத ஒரு திரைப்படமாக அமைந்தது படையப்பா தான். இந்த திரைப்படத்தில் நடித்து இருந்த ஒவ்வொரு கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற இருந்தது.அந்த வகையில் இப்படத்தில் அப்பாஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிப்பதற்காக ஆசைப்பட்டாராம் எனவே கேஎஸ் ரவிக்குமாரை நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்டாராம்.
ஆனால் அவ்வப்பொழுது நடிகர் விஜய்க்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பதில் பல பிரச்சனைகள் இருந்ததால் கேஎஸ் ரவிக்குமார் தவிர்த்து விட்டாராம். இந்த தகவலை நடிகர் விஜய்யே ஒரு பேட்டியில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்காக தானாக போய் வாய்ப்பு கேட்டேன் என்று கூறியிருந்தார்.