நடிகர்,நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கென்றும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் முக்கியமாக ஒரு சில இயக்குனர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல இமேஜ் கிடைத்துவிட்டால் இவர் இப்படிப்பட்ட இயக்குனர் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இளைஞர்களின் ரசனையை உணர்ந்து எடுக்கும் இயக்குனர் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. பொதுவாக வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது.
எனவே தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். பொதுவாக சினிமா என்றாலே இயக்குனர், நடிகர், நடிகைகள் என்று யாராக இருந்தாலும் வெற்றி தோல்வியை பார்ப்பது சாதாரணமான ஒன்று அந்தவகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சில திரைப்படங்கள் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்து பெரிதாக வெற்றி பெறாத படங்களும் இருக்கிறது.
அந்தவகையில் ஒரு திரைப்படம் தான் பிரியாணி இத்திரைப்படத்தில் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தார்கள். ரசிகர்களால் இத்திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் ரிலீசாகிய பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் அமையாததால் பெரிதாக இத்திரைப்படம் ஓடவில்லை.
இத்திரைப்படத்தின் கதை முதலில் விஜயை வைத்து தான் எழுதப்பட்டதாம் அந்த வகையில் வெங்கட் பிரபு விஜயிடம் திரைப்படத்தின் கதையை கூறினாராம் ஆனால் அப்பொழுது விஜய் பல படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்ததால் விஜயால் இத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது.