தமிழ் திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய் அவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் திரை உலகில் ரஜினி கமல் ஆகிய இருவர்களுக்கு பிறகு போட்டி என்றால் அது அஜித் விஜய் தான்.
அந்த அளவிற்கு இவர்களுக்கு ரசிகர் கூட்டம் திரைஉலகில் உள்ளது மட்டுமின்றி உலக அளவிலும் பல்வேறு ரசிகர்களை வைத்துள்ளார்கள். அது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபீஸ் லிஸ்டில் எடுத்துப்பார்த்தால் இவர்களுடைய படங்கள்தான் அதிகம் இருக்கும்.
அந்த வகையில் ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தை தயாரித்த சௌந்தரபாண்டியன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியது என்னவென்றால் இந்த திரைப்படத்தை நான் எடுக்கும் போது விஜய்-அஜீத் ஆகிய இருவருமே ஒரு சாதாரண நடிகர்கள்.
ஆனால் அவர்களிடம் தற்போது டேட் வாங்குவது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம் அந்தவகையில் விஜய்-அஜித் வைத்து 25 வருடங்களுக்கு முன்பாகவே படம் எடுத்தது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது அந்த வகையில் முதலில் இந்த திரைப்படத்தின் கதையை விஜய்யிடம் தான் கூறினேன்.
அதன்பிறகு இரண்டு ஹீரோக்கள் வேண்டும் என்பதன் காரணமாக அஜித்திடமும் இந்த கதையை கூறினேன் ஆனால் இவர்கள் இருவருமே இந்த திரைப்படத்தில் போட்டி போட்டுக்கொண்டு ஓகே சொல்லி நடிக்க ஆரம்பித்தார்கள். அது மட்டுமில்லாமல் அந்த அளவிற்கு மிகவும் நட்பாகவும் இருந்தார்கள்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் இவர்களின் முதல் திரைப்படம் என்பதன் காரணமாக மிக குறைந்த பட்ஜெட்டில் தான் உருவாக்கப்பட்டது. இதனால் தளபதி விஜய்க்கு மிகக் குறைந்த அளவு சம்பளமே இந்த திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்டது அதுவும் தல அஜித் இந்த திரைப்படத்திற்கு சம்பளமே வாங்கவில்லையாம்.