Vijay; தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியான நிலையில் இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. இதனை அடுத்து லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் இவருடைய காட்சியின் படப்பிடிப்புகள் சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற முடிந்த நிலையில் மேலும் சென்னையில் நடைபெற்றது.
இவ்வாறு விஜய் படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது லியோ படத்தினை முடித்துவிட்டு விஜய் வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியானது ஆனால் அதற்குள் தொடர்ந்து விஜய் அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
அதாவது நடிகர் விஜய் வருகின்ற 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னோக்கி அவருடைய அரசியல் பயணத்தை வைத்து மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார். எப்பொழுதும் சினிமாவில் தனக்கு போட்டியாளராக விஜய் அஜித்தை பார்த்து வரும் நிலையில் தற்போது அஜித் எல்லாம் எனக்கு போட்டியே கிடையாது என கூறி இருக்கிறார்.
அதாவது இனிமேல் அஜித் எனக்கு போட்டி கிடையாது நடிகர் ரஜினி தான் அவர்கள் தான் எனக்கு முக்கியமான போட்டி அதிலும் சூப்பர் ஸ்டார் என்ற அவருடைய பட்டம் தானாக தன்னை வந்து தேட வேண்டும் எதற்காக தனது மொத்த முயற்சி உழைப்பையும் போட தயார் என அவரது மக்கள் இயக்கத்தினர்களிடம் பேசியுள்ளார். இவ்வாறு இதனை எல்லாம் தெரிந்துக் கொண்ட ரசிகர்கள் ரஜினிகாந்த் தான் என்னைக்கும் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் என கூறி வருகின்றனர்.