திரை உலகில் இருக்கும் நடிகர்கள் பலரும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர் ஆனால் ஒரு சிலரோ கிராமத்து சாயலில் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெறுவார்கள் வெகு சிலரே .
அதில் முதமையான நடிகர்களில் ஒருவராக பார்ப்பவர் சித்தார்த் இவர் இதுவரை 24 திரைப்படங்களில் நடித்து உள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் கிராமத்து சாயலில் தான் இருந்திருக்கும் அதன்மூலம் தான் தற்போது இவர் பிரபலம் அடைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைனா, வீரம், முதல் பரிசு, குரங்கு பொம்மை போன்ற பல்வேறு கிராமத்தில் உள்ள படங்களில் நடித்து அசத்தியுள்ளார் தற்போது 25 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இவர் இதுவரை நடித்திடாத கேரியரில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனியை வைத்து அண்ணாதுரை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சீனிவாசன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்பொழுது “கார்பன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த டைட்டிலை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.இந்த படம் கூறித்து இயக்குனர் சொன்னது.
படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி குறிக்கப்படுவது சிக்கலானது ஏனென்றால் அதற்கு முன்பாக படத்தின் டைட்டிலை கண்டுபிடித்து வேண்டும் சிறப்பாக வைக்க இயக்குனர் தீவிரம் காட்டினார். இதனால் படகுழு ஒன்றிணைந்து 20 தலைப்புகளை கொடுத்துள்ளனர் அது எதுவுமே இயக்குனருக்கு பிடிக்காத நிலையில் தற்போது கார்பன் என்ற டைட்டில் இந்த கதைக்கு ஏற்றவாறு பொருந்தி உள்ளது என அவர் கூறியுள்ளார்.
இந்த படம் முழுக்க முழுக்க கனவுகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது ஒரு நபர் கனவு காணும் அனைத்து நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்ன நடக்கும் என்பதை ஆராயும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது இதற்கு கார்பன் என்ற பெயரே மிகவும் பொருத்தமாக இருக்கும் என அதிரடியாக தெரிவித்தார்.
இந்த படம் எடுக்க அனைத்து முன்னெச்சரிக்கையும் நாங்கள் சரியாக பின்பற்றி குறித்த நேரத்தில் படத்தை முடித்து விட்டோம் இந்த படம் நிச்சயம் உங்களுக்கு சிறப்பான படமாக அமையும் என்றார் மேலும் படம் மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்யப்படும் என திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.