வளர்ந்து வரும் நடிகரின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் வடிவேலு.! இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.!

vativelu

தமிழ் சினிமாவில் காமெடியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் தமிழ் சினிமாவின்  ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு. இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வந்தது.

பிறகு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து கலக்கி வந்தார் இவ்வாறு நன்றாக போய் கொண்டிருந்த நிலையில் திடீரென்று அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து இவர் நடிப்பதற்கு நான்காண்டுகள் தடை செய்யப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் இம்சை அரசன் படத்தினால் ஷங்கருக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான நஷ்டத்தினால் தான்.

தற்பொழுது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து சரியான நிலையில் சமீபத்தில்தான் ரெட் கார்ட் நீக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து நடிகர் வடிவேலு 5 திரைப்படங்கள் நடிப்பதற்காக கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் நாய் சேகர் திரைப்படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது இதனை தொடர்ந்து அடுத்த நான்கு திரைப்படங்களை வடிவேலுவை  வைத்து லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

நாய் சேகர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரெடின் கின்ஸிலி படப்பிடிப்பிற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால் தற்பொழுது வந்த  நடிகருக்காக நான் காத்திருக்க வேண்டுமா என்று கூறிவிட்டு வடிவேலு படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு கிளம்பி விட்டாராம்.

கோபமடைந்த படக்குழுவினர்கள் அனைத்தும் தயாராக இருந்ததும் ரெடின் கின்ஸிலி உன்னால் தான் இவ்வளவு பிரச்சினையும் என்று திட்டி வருகிறார்களாம். இவ்வாறு ரெடின் கின்ஸிலி 4,5 என்ன படங்களில் மட்டுமே நடித்து பிரபலமடைந்துள்ளார்.எனவே இவரின் வளர்ச்சியை பார்த்து வடிவேலு பொறாமை படுவதாக கூறிவருகிறார்கள்.